மரண அறிவித்தல்
தோற்றம்
3 March, 1948மறைவு
12 February, 2022திருமதி பத்மினிபரமேஸ்வரி பாலகிருஷ்ணன் (வயது : 74)
பிறந்த இடம்
சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு
சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
தேவாலய வீதி, உரும்பிராய் கிழக்கு
தேவாலய வீதி, உரும்பிராய் கிழக்கு
சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராயை பிறப்பிடமாகவும், தேவாலய வீதி உரும்பிராய் கிழக்கு உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மினிபரமேஸ்வரி பாலகிருஸ்ணன் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12.02.2022) இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் Dr.நிரஞ்சனா (கொழும்பு தேசிய வைத்தியசாலை), நிராஜினி (மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்), டிஷானி (பொறியியலாளர், அவுஸ்ரேலியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும், யசோதரன் (ஆசிரியர், உரும்பிராய் இந்துக் கல்லூரி), அசோகன் (பொறியியலாளர் அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும், விவேகானந்தன் (ஓய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் கொழும்பு), நகுலேஸ்வரி (ஜேர்மனி), மகாதேவா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வத்சலா, சந்திரா, சிவபாலன், தவமணி, சீலாவதி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஷனஜன், டனோஷன் (யா/கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள்), தருணிகன் (அவுஸ்ரேலியா), சத்விகா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (15.02.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோப்பாய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள்