மரண அறிவித்தல்
தோற்றம்
5 September, 1950மறைவு
30 November, 2021முருகேசு இரத்தினம் (வயது : 71)
நெல்லியடி மகாத்மா வீதி
நெல்லியடி மகாத்மா வீதி
மகாத்மா வீதி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இரத்தினம் அவர்கள் இன்று (30.11.2021) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகன் சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகேசு (செல்வராசா, சாயி மெடிக்கல் உரிமையாளர்), அன்பு மனைவியும், முருகவேள் (சுதன் – சுவிஸ்), சதீஸ்குமார் (சுவிஸ்), அனுதா (இத்தாலி), பபிதா (லண்டன்) சபேஸ்குமார் (கொழும்பு, லவ்லி ஹோட்டல் உரிமையாளர் ), உதயசங்கர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீபாலினி, மேகலராணி, யேகேந்திரநாதன், கிருபாகரன், ஜெயமதி, ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமியும், விமல்ராஜ், சுவர்ணா, சுகன்யா, சாமிலா, மகாஷ், முகேஷ், தேனுகா, தேனுஜன், வேணுஜன், சந்தோஷ், ரிஷி, டிலக்சியா, வர்னியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 30.11.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.