Tue. Jun 28th, 2022

மரண அறிவித்தல்

தோற்றம்

1983-12-24

தோற்றம்

24 December, 1983

மறைவு

20 November, 2021

ஆனந்தகிருஷ்ணன் தணிகைக்குமரன் (தனுஸ்) (வயது : 38)

பிறந்த இடம்
ஆவரங்கால்
வாழ்ந்த இடம்
லண்டன்

மறைவு

2021-11-20
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், லண்டன்  சட்பறி ( Sudbury ) யை வதிவிடமாகவும் கொண்ட  ஆனந்தகிருஷ்ணன்  தணிகைக்குமரன் ( தனுஸ் ) கடந்த  20-11-2021 சனிக்கிழமை லண்டனில் இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் திரு.திருமதி. ஆனந்தகிருஷ்ணன் சுந்தரேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், திரு.திருமதி.சுந்தரமூர்த்தி லோகேஸ்வரி தம்பதியரின் அன்பு  மருமகனும், சிந்துவின் பாசமிகு கணவரும், நிதுன் , நிகிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சின்னையா பரமேஸ்வரி, மற்றும் புவனேஸ்வரி, பாலசரஸ்வதி ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்ற  அன்னம்மா மற்றும் சின்னத்தங்கம் ஆகியோரின் மருமகனும், ஆனந்தகெளரி (சுவிஸ்), கெளசலா
(ஆசிரியர் யா/அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி) சுதர்சினி ( ஜேர்மன்) கமலக்குமரன் ( ஆசிரியர் யா/இடைக்காடு மகா வித்தியாலயம் அச்சுவேலி) ஆகியோரின் சகோதரனும், திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், லக்சிகா, நிலானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  நிரூபனின் சகலனும், ஆகாஷ், அஸ்மிதா, ஆஷிகா, ஆர்த்திகா, அக் ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அபினாஸ், அப்சரன், அத்விகா, தன்விகா, ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை 8th kenton scout centre, 387, kenton road harrow HA3, OYG எனும் இடத்தில் நடைபெற்று,  பூதவுடல் Golders, green crematorium 62,Hoop lane, London தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
(இந்த லிங்கின் ஊடாக இறுதிக் கிரியைகளை பார்வையிடலாம்
Share This:

தொடர்புகளுக்கு

கமலக்குமரன் (சகோதரன்)

பிரிவுத்துயர் பகிர்வு