மரண அறிவித்தல்

தோற்றம்
1 June, 1964மறைவு
12 November, 2021சிதம்பரப்பிள்ளை கன்னிகா (ராணி) (வயது : 57)
பிறந்த இடம்
உடுத்துறை
உடுத்துறை
வாழ்ந்த இடம்
உடுத்துறை வடக்கு தாளையடி
உடுத்துறை வடக்கு தாளையடி
சிதம்பரப்பிள்ளை கன்னிகா (ராணி)
உடுத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கன்னிகா (ராணி) கடந்த 12.11.2021 அன்று காலமாகிவிட்டார்.அன்னார் காலம்சென்ற சின்னத்தம்பி தங்கமலர் தம்பதிகளின் அன்புமகளும் , காலம்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிதம்பரப்பிள்ளை (துரை) அவர்களின் அன்புமனைவியும், கிருபாதேவியின் பாசமிகு தாயாரும், அரவிந்தனின் அன்பு மாமியாரும், சிவயோகம், பொன்சிவலிங்கம், வைரமுத்து,
கணபதிப்பிள்ளை, காலம்சென்றவர்களான சிவஞானம், சிவசோதி, பஞ்சலிங்கம், சித்திராதேவி, புஸ்பறஞ்சன், ஆகியோரின் அன்புச்சகோதரியும், செல்லத்துரை, சகுந்தலாதேவி, ஆனந்தகுமாரி, பொன்ராசா, லோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14. 11.2021) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 10 மணியளவில் உடுத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது .இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
ரவி( சகோதரன்)