மரண அறிவித்தல்
தோற்றம்
23 February, 1948மறைவு
20 October, 2021திருமதி பத்திநாதன் சந்திராதேவி (சுதந்திரம்) (வயது : 74)
பிறந்த இடம்
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு, தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்திநாதன் சந்திராதேவி (சுதந்திரம்) அவர்கள் நேற்று (20.10.2021)
புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் (ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்), அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – பிறிகேற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தேனுகா (ஆசிரியை, யா/நெல்லியடி மத்திய கல்லூரி), தேவதர்சன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுகாதார அமைச்சு, வடமாகாணம்), தேவதயாளன் (பாதுகாப்பு பரிசோதகர், வவுனியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், திவ்யநாதன் (புள்ளிவிபர உத்தியோகத்தர்,மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), ஜனனி (அபிவிருத்தி உத்தியோகத்தர், நகரசபை, வல்வெட்டித்துறை), சரண்யா (தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மாமியும், விஷாலி, சாருதி, ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும், யோ.அல்வீனம்மா, அ.மேரிமாகிறற், அ.மேரிஞானசீலி, அ.சிந்தாத்துரை, அ.ஜெபநேசன், தே.மேரிடொறின் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.10.2021) வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
“தணிகை”
அல்வாய் வடக்கு, அல்வாய்