மரண அறிவித்தல்
தோற்றம்
18 March, 1965மறைவு
4 September, 2021ஸ்ரீமதி ஜெயந்தி சோமதேவகுருக்கள் (வயது : 57)
நீர்வேலி
நீர்வேலி
யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஜெயந்தி சோமதேவகுருக்கள் கடந்த (04.09.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற மாணிக்க ஐயர் மற்றும் ஸ்ரீமதி தேவசேனா தம்பதியரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சாம்பசதாசிவ குருக்கள் மற்றும் கெளரி அம்பாள் தம்பதியரின் அன்பு மருமகளும், நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சோமதேவகுருக்களின் அன்பு மனைவியும், வரப்பிரதன், சிவஸ்ரீ சிவஜெயன் சிவாச்சாரியார், நிதர்ஷனன், சிந்துகேயன், மனுப்பிரியா, சாருகேஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணேசவாணியின் அன்பு மாமியும், ஹரிசாஹித்தியனின் பாசமிகு பாட்டிம் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (08.09.2021) புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் இடம் பெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.