மரண அறிவித்தல்

தோற்றம்
22 May, 1944மறைவு
2 September, 2021சுப்பையா அம்பிகைபாகன் (வயது : 77)
அளவெட்டி
கந்தரோடை கொழும்பு
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும்: கந்தரோடை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா அம்பிகைபாகன் அவர்கள் இன்று ( 02.09.2021) வியாழக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சுப்பையா, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சோமசுந்தரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுந்தரேஸ்வரி அம்பிகைபாகன் அவர்களின் அன்புக் கணவரும்; அகிலா, சுமணா, கோகுலன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், முரளீதரனின் (அவுஸ்திரேலியா) பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி (லண்டன்), காலஞ்சென்ற கமலாதேவி (லண்டன்), கனகாம்பிகாதேவி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலாம்பிகை, குகநேசன் (அவுஸ்திரேலியா), இன்பநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்: மருத்துவர் செல்வராஜா அவர்களின் அன்பு மைத்துனரும், டிவாகரன், கோவர்த்தன் ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நாளை ( 03.09.2021) வெள்ளிக்கிழமை அன்று காலை 9 முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்றபின்னர் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2 மணிக்கு கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்