மரண அறிவித்தல்

தோற்றம்
5 September, 1949மறைவு
12 August, 2021அரியகுட்டி செல்வராசா (வயது : 72)
பிறந்த இடம்
தொல்புரம் கிழக்கு
தொல்புரம் கிழக்கு
வாழ்ந்த இடம்
இலந்தைக்காடு
இலந்தைக்காடு
தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் இலந்தைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி செல்வராசா அவர்கள் நேற்று முன்தினம் (11.08.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கணபதி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், தவம், ராணி, காலஞ்சென்ற ஏகநாதன் மற்றும் சபாரத்தினம், குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், வனிதா, வரதராசா (லண்டன்), ஜெயராசா (கரவெட்டி பிரதேச சபை), ஜெனராசா (ஜெனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகிர்தன் (இலங்கை போக்குவரத்து சபை) தர்ஷிகா (லண்டன்), பூவிகா, ஜெசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தங்கராசா, தங்கம்மா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தங்கராசா மற்றும் தங்கம்மா, முருகையா, பூபதி, றோஸ்மலர், இரத்தினசிங்கம், ஈஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.08.2021) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணிக்கு எள்ளங்கும் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன்