Sat. May 16th, 2026
மரண அறிவித்தல்

முலவை மயலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் உதயசூரியன் வீதி உடுவில் கிழக்கை நிரந்தர வசிப்படமாகவும் கொண்ட அமரர். மூத்தான் தங்கன் அவர்கள் இன்று  06.08 2011 வெள்ளிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார் . அன்னார்  காலஞ்சென்றவர்களான முத்தான மாதியன் தம்பதிகளின்  அண்புப் புதல்வனும் , காலஞ்சென்றவர்களான ஆண்டி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் மற்றும் சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும், அருந்தவம் அவர்களின் அன்புச்  சகோதரனும்,   காலஞ்சென்ற முத்துதுரை , இராசதுரை புஸ்பம் , பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச்  சகோதரனும்,   முருகதாஸ் ( யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரி) , இன்பதாஸ் ( மன்னார் . செல்லூரியா மகா வித்தியாலயம்) , பிரதீபா

(பிரான்ஸ் ), சிவதீபா
(தெல்லிப்பளை பிரதேச செயலகம் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மாவதி ( கிளிநொச்சி புனித தெரேசாள் மகா வித்தியாலயம் ) கனிதா, ஜெயதீபன் ( பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  தனலக்சிகன், விசானா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் உடுவில் உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

மயிலிட்டி வடக்கு

வாழ்ந்த இடங்கள்

உடுவில்

You may have missed