மரண அறிவித்தல்
தோற்றம்
15 December, 1950மறைவு
13 June, 2021திருமதி நேசமலர் தர்மலிங்கம் (வயது : 71)
புளியங்குளம்
புளியங்குளம்
புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நேசமலர் தர்மலிங்கம் அவர்கள் இன்று (13.06.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் பொன்னையா தர்மலிங்கம் (ஓய்வு பெற்ற மருந்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை (கள்ளுக்குளம்) தம்பதியரின் அன்பு மருமகளும், யோகராசா (ஓய்வு பெற்ற கிராம அலுவலகர் புளியங்குளம்), தர்மராசா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயந்தி (பிரான்ஸ்), பிரபாகரன் (கால்நடை வைத்தியர் சாவகச்சேரி), கிருபாகரன் (T.K.இரும்பகம் புளியங்குளம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகுமார் (பிரான்ஸ்), அமுதா(விலங்குப் புலனாய்வாளர் யாழ்ப்பாணம்), காயத்திரி (ஆசிரியர் வ/வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மாமியும், ராகவி, வர்ஷன் (பிரான்ஸ்), லக்ஸன் , லாஷினி, பிரக் ஷன், ஹரீஸ், ஹரிஷா, ஹர்ச்சித் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.