மரண அறிவித்தல்

தோற்றம்
22 May, 1946மறைவு
30 May, 2021நாகலிங்கம் லோகநாதன் (ஓய்வு நிலை உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம்) (வயது : 75)
மலேசியா
தெல்லிப்பளை
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் இன்று (30.05.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கனகராயர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மஜா (ஓய்வு பெற்ற ஆசிரியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், பவதாரணி அவர்களின் பாசமிகு தந்தையும், ஜயப்பிரசாந் (உதவி முகாமையாளர், கொமேர்சல் வங்கி, வெள்ளவத்தை) அவர்களின் அன்பு மாமனாரும், சாய் மதுரன், சாய் மஞ்சரி ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான அம்பிகாதேவி, கதிர்காமநாதன் மற்றும் ஜெகநாதன் (முன்னாள் சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்), தர்மநாதன் (முன்னாள் உத்தியோகத்தர் பிறவுன்ஸ் கம்பனி), தவநாதன் (ஓய்வு நிலை கூட்டுறவு உத்தியோகத்தர்), சிவநாதன் (ஓய்வு நிலை கிராம சேவையாளர்), ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.