மரண அறிவித்தல்

தோற்றம்
2 July, 1946மறைவு
9 August, 2019வேலுப்பிள்ளை தையலம்மை (வயது : 73)
புங்குடுதீவு
ஓட்டுமடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம் காளிகோயில் வீதியைப் பிறப்பிடமாகவும் 42, அராலி வீதி
ஓட்டுமடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தையலம்மை நேற்று
09.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரவாகு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற
வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற யோகராணி அவர்களின் அன்பு
தாயும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, லெட்சுமணன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல்
இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
42, அராலி வீதி, ஓட்டுமடம்