மரண அறிவித்தல்

தோற்றம்
21 August, 1951மறைவு
30 March, 2021திருமதி யோகேஸ்வரி இராசேந்திரம் (ஓய்வு நிலை ஆசிரியை யா/கட்டைவேலி மெ.மி.த.க.பாடசாலை) (வயது : 70)
பிறந்த இடம்
கரவெட்டி கிளவி தோட்டம்
கரவெட்டி கிளவி தோட்டம்
வாழ்ந்த இடம்
கரவெட்டி கிளவி தோட்டம்
கரவெட்டி கிளவி தோட்டம்
கரவெட்டி கிழக்கு கிளவி தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி இராசேந்திரம் அவர்கள் இன்று (30.03.2021) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வியும், வலவன் தோட்டம் கரணவாய் இராசேந்திரம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்), அவர்களின் அன்பு மனைவியும், நிருபன், நிதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சி.யோகேஸ்வரன் (எழுதுவினைஞர்), இராமேஸ்வரன், புவனமலர், மற்றும் சண்முகேஸ்வரன் (ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானபூரணரஞ்சிதமலர், சாந்தகுமாரி (ஆசிரியை யார்க்கரு விநாயகர் வித்தியாலயம்), ஆகியோரின் மைத்துனியும், காருண்யா (பல் வைத்தியர் கரவெட்டி), சிந்துஜா (சித்த வைத்தியர்), அபினயா (மருத்துவக் கல்லூரி மாணவி), பாணுஜன் (பல்கலைக் கழகம் கிளிநொச்சி), ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (31.03.2021) புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிருபன்