மரண அறிவித்தல்
தோற்றம்
5 October, 1940மறைவு
21 February, 2021சண்முகம் நல்லையா (வயது : 80)
இமையாணன் இத்தியோடை
முடக்காடு நெல்லியடி கிழக்கு
இத்தியோடை இமையாணனை பிறப்பிடமாகவும் முடக்காடு நெல்லியடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நல்லையா அவர்கள் இன்று (21.02.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்தார் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் மற்றும் தவமணியின் அன்புக் கணவரும், கார்த்திகேசுவின் அன்புச் சகோதரரும், சுமதி, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான ராஜலக்சுமி, கிருஸ்ணபிள்ளை, செல்லையா, மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயரட்ணம் (கட்டி), கொன்சலா (றெஜி), முரளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், வேலாயுதம், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறாவாத சகோதரரும், Dr. கமலநாதன் (பதில் வைத்திய அத்தியட்சகர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை), கமலராணி, கமலராஜா, கமலதீபன், துஸ்யந்தி, சுரேஸ், சுகந்தி, சுகன்யா, சுரேன் ஆகியோரின் பெரிய தந்தையும், நிதர்சன், துர்கா, கீர்த்தனா, தாட்சாயினி, அபிஷாயினி, ஸ்ரேபிகா, லக் ஷாந் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.02.2021) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.