மரண அறிவித்தல்

தோற்றம்
23 December, 1990மறைவு
28 January, 2021கெளரீஸ்வரன் ஸ்ரீகாந் (வயது : 30)
மானிப்பாய் தெற்கு
மானிப்பாய் தெற்கு
உடுவில் தெற்கு மானிப்பாய் ஈஞ்சடி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கெளரீஸ்வரன் ஸ்ரீகாந் கடந்த (28.01.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் கெளரீஸ்வரன் ஸ்ரீரதி தம்பதியரின் அன்பு மகனும், கெளசிகன், கெளரிகாந், துளசிகன், ஜனதர்சினி, ஐங்கரமதன் ஆகியோரின் பாசமிகு சகோதரும், கஸ்தூரி, தாட்சாயினி, சந்துரு லண்டன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதித்தின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.