மரண அறிவித்தல்

தோற்றம்
25 March, 1979மறைவு
28 January, 2021பேணாட் கரன் (கண்ணன்) (வயது : 42)
யாழ்ப்பாணம்
வவுனியா (வதிரி)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும், வதிரி சிவகங்கையை புகுந்த இடமாகவும் கொண்ட பேணாட் கரன் (கண்ணன்) நேற்று (27.01.2021) புதன்கிழமை அகால மரணமடைந்துவிட்டார். அன்னார் பேணாட், காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகனும், பாக்கியராஜன் சிவராணியின் மூத்த மருமகனும், மனோஜாவின் அன்புக் கணவரும், றோகித் (மாணவன், நெல்லியடி மத்திய கல்லூரி) வைஷாலி (மாணவி, வடஇந்து மகளிர் கல்லூரி), ரிஷானா (மாணவி, நெல்லியடி மெ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோஷனா அவர்களின் அன்பு மைத்துனரும் (பிரதேச செயலகம், கோப்பாய்) குமணனின் அன்புச் சகோதரனும், விகாஷின் அன்புப் பெரியதந்தையும், சின்னத்தம்பி, அமரர்களான சிவசக்தி, அகஸ்ரின் சௌந்தரநாயகம், கிறிஸ்ரீனா ரூபி ஆகியோரின் பாசமிகு பேரனும், பேணாட் ஜெராட் அல்பேட் (வவுனியா), பேணாட் கிறிஸ்ரி றொபேட் (வவுனியா), ஜெயந்தன் அன்ரலீனா (சுவிஸ்), யோகா மடோனா (அரியாலை பூம்புகார்), டெரிக் மேரி மற்றீனா (கனடா), தாஸ் தேவ மறீனா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
அன்னாரது பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து நாளை( 29.01.2021) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் ஆத்மசாந்தி இளைப்பாற்றுகைக்காக வதிரி தச்சவயல் புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சரீர ஆசீர்வாதத்தின் பின் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்