மரண அறிவித்தல்

தோற்றம்
12 January, 1934மறைவு
31 December, 2020கந்தையா ஏகாம்பரம் (வயது : 87)
பிறந்த இடம்
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
வாழ்ந்த இடம்
யாழ் நல்லூர்
யாழ் நல்லூர்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஏகாம்பரம் அவர்கள் இன்று 31-12-2020 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், நாகேந்திரா, தேன்மதி, கிரிஜா, பாலேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும், நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பராசக்தி, இராஜரட்ணம், செல்வரட்ணம், மதியாபரணம், இராஜதுரை மற்றும் தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, ஆறுமுகம் மற்றும் மங்கையற்கரசி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலனும், மாலதி, சூரியகுமார், ஜெகநாதன், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,மேகநாதன், கெளசலாதேவி, இராஜன், நிர்மலாதேவி, சிவகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ஷாஹினி, பிரகாஸ், பிரஷாந்தி, நிரோஷ், தர்ஷன், ஜெய்ஷன், டிவ்யா, லக்ஷ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும், சுரபி, அகர்வின், ஆத்மிகா அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேந்திரன்
தேன்மதி
கிரிஜா
பாலேந்திரா
சூரியகுமார்