Mon. Aug 10th, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு,  பயித்தோலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
கணபதிப்பிள்ளை குலநாயகம் நேற்று முன்தினம்  05.08.2019 திங்கட்கிழமை இறைபதம்
அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா கணபதிப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் மூத்த
புதல்வனும், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சற்குணம் தம்பதிகளின் அன்பு
மருமகனும் தவமணிதேவி அவர்களின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்
(செய்தியாளர் திறைசேரி), முத்துலிங்கம் (ஓய்வு பெற்ற தபால் அதிபர்), மற்றும்
சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் குலேந்திரன், குமுதினி, மகேந்திரன்,
சயந்தன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சுதர்சினி, கனகலிங்கம், அற்புதரட்ணம்,
கேதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,  கோபிகா,  விஸ்ணுவரதன், மிருஷிகா,
கஜேந்தினி, கோகுலன், யோதிகன், மாதுமை, வேணுயன், சிவானி ஆகியோரின் பாசமிகு
பேரனும்,  பிரவீன் அவர்களின் பூட்டனும், புவனேஸ்வரி,  வரதராஜா, மயூரிகா,
காலஞ்சென்றவர்களான நாராயணமூர்த்தி,  அருள்மறைகண்டதேவி மற்றும் சரஸ்வதி
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 08.08.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முழங்கன் இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
அச்சுவேலி தெற்கு
அச்சுவேலி

Share This:

இடம்

அச்சுவேலி தெற்கு

வாழ்ந்த இடங்கள்

அச்சுவேலி தெற்கு

You may have missed