மரண அறிவித்தல்
தோற்றம்
14 April, 1933மறைவு
3 August, 2019குழந்தைவேலு (மனேச்சர்), தையல்நாயகி செல்லம்மா (வயது : 86)
பிறந்த இடம்
புங்குடுதீவு
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
முரசுமோட்டை
முரசுமோட்டை
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குழந்தைவேலு தையல்நாயகி கடந்த 03.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் பத்மலிங்கம்( புங்குடுதீவு) சரஸ்வதிதேவி (முரசுமோட்டை) சாந்தாதேவி (பிரான்ஸ்) காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம்( கனடா)சிவலிங்கம் (பிரான்ஸ்) குணதேவி (பிரான்ஸ்) கலாதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற பரமலிங்கம்( பரமு முரசுமோட்டை ) மற்றும் வைஜெயந்திமாலா( பிரான்ஸ்) றஞ்சனாதேவி (கனடா) சித்திரா (பிரான்ஸ்) காலஞ்சென்ற தியாகராசா மற்றும் நித்தியராஜா (பிரான்ஸ்) வாமதேவன் (பிரான்ஸ்) சிவகுமார் (கனடா) மற்றும் ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமியும் துளசிகா ,நவநீதன் பிரான்ஸ், பாஸ்கரன் (பாசி முரசுமோட்டை) மைதிலி (முரசுமோட்டை), செந்தினி (மாலா- கனடா), தனஞ்ஜெயன், சுரேஷ்குமார், கஸ்தூரி (பிரான்ஸ்) தர்சிகா, மதன், மயூரன் (கனடா) சிவாஜிகா, பிரியங்கா, அனுஷா (பிரான்ஸ்) நிவேதா, சுஜீவன், சாருசன்( பிரான்ஸ்) அனோஜ், அனுசன், அஜித், அலைக்ஸன் (பிரான்ஸ்) சிந்துஜா, அபிரா, சுலக்ஸன்( கனடா), சித்திரா (பிரான்ஸ்) சிவநந்தினி, வரதராஜா (சுரேஷ்-முரசுமோட்டை), வரததாசன் (கனடா) தர்சன் (பிரான்ஸ்) நிலுஷா (பிரான்ஸ்) கமலரூபன் (பிரான்ஸ்) செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் அகரன், இமையாள், குறளின்பன், சானுஜா, குறளினியாள், சென்கீரன் , சங்கவி, செந்தழிரன், கரிஸ்குமார், அஜானா, ஜஸ்ரினா, கனிக்கா, தியானா ஆகியோரின் அன்பு பூட்டியும் காலஞ்சென்ற பாலசிங்கத்தின் (பொலீஸ் உத்தியோகத்தர்) அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் பெறாமகளும் சரஸ்வதியின் மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 07.08.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (முரசுமோட்டை) நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முரசுமோட்டை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Home Sri Lanka
சண்முகம்
சாந்தா
சிவா
குணா












