மரண அறிவித்தல்

தோற்றம்
16 December, 1945மறைவு
4 August, 2019திருமதி உமாதேவி யோகீஸ்வரன் (வயது : 74)
கோப்பாய்
கோப்பாய்
முதலியார் ஒழுங்கை கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி உமாதேவி யோகீஸ்வரன் நேற்று முன்தினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை
இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சண்முகசுந்தரம் தம்பதிகளின் அன்பு
மகளும் காலஞ்சென்ற குட்டிஐயா யோகீஸ்வரன் (இளைப்பாறிய லிகிதர்) அவர்களின் அன்பு
மனைவியும் ஆரூரன் அவர்களின் அன்புச் சகோதரியும் அமரேசன் டென்மார்க் குகநேசன்,
கெளரி சுவிஸ் தாரணி கனடா பவானி, கணேசன் பொறியியலாளர் சிங்கப்பூர், கேதீசன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் மகளிர் விவகார அமைச்சு, ஆகியோரின் பாசமிகு
தாயாரும் உதயா, லிங்கநாதன், ஜெகதீஸ்வரன், ரவீந்திரன், அஞ்சனா, துளசி,
ஆகியோரின் அன்பு மாமியும் அபிராம், ஹரிராம், ஆதீஸ், சஞ்சீவன், தருணிகா,
சரணிகா, சாத்வீகா, அக்ஷிதா, ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 06.08.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12
மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல்
2 மணிக்கு கோப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த
அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
முதலியார் ஒழுங்கை
கோப்பாய் வடக்கு