Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

தும்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உருக்குமணிதேவி சிவஞானசுந்தரம் இன்று (02.11.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், சி. சிவஞானசுந்தரம் (அமரர்) ஓய்வுபெற்ற அதிபர் அவர்களின் ஆருயிர் மனைவியும், பரமேஸ்வரி (அமரர்), திருநாவுக்கரசு (அமரர்), யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திரவதனா (அமரர்), சிவச்சந்திரன் (அமரர்), சறோசா (ஓய்வுபெற்ற காணிப்பதிவு உத்தியோகத்தர் – பருத்தித்துறை), சிவகனேசன் (ஆசிரியர் யா / ஹாட்லிக்கல்லூரி), சத்தியரஞ்சனி (அமரர்), சுகுணலினி (மாவட்டகலாசார உத்தியோகத்தர் – கிளிநொச்சி), சிவசங்கர் (அபிவிருத்தி உத்தியோகத்தர் கோட்டக்கல்வி அலுவலகம் – பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரவீந்திரன், சுபத்திரா, விஜரட்ணம் (அமரர்), வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும், யோகேஸ்வரன்(Qatar), ஞானேந்திரன்( மருதங்கேணி பிரதேச செயலகம்), கேதீஸ்வரன்( கச்சேரி, யாழ்ப்பாணம் ), அஜித்ராம், அரவிந்தன்( Engineer, கொழும்பு ) டினோஜன், அனுஷா, சிவஜனன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோரியடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
தும்பளை, பருத்தித்துறை

Share This:

இடம்

தும்பளை, பருத்தித்துறை

வாழ்ந்த இடங்கள்

தும்பளை, பருத்தித்துறை

You may have missed