Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

வத்திராஜன் தெற்கு மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும் புலோலி மத்தி ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம் சிவஞான இந்திரன் நேற்று  20.10.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற தணிகாசலம் கோணாத்தைபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும்,  காலஞ்சென்ற ஆறுமுகம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,  கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,  பாலமுரளி (லண்டன்), அச்சுதன் (மாலைதீவு), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சிவஞான ஈஸ்வரன் மற்றும்  சிவஞான ஐங்கரன்,  சிவஞான ஆனந்தன்,  அருந்ததி,  திருநாவுக்கரசு,  மங்கையற்கரசி,  ஆகியோரின் அன்புச் சகோதரனும், சோமதேவன், கந்தையா,  இரவீந்திரநாதன், அமரர் விக்னேஸ்வரி, ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 23.10.2019 புதன்கிழமை முற்பகல் 8 மணியளவில் ஆத்தியடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
ஆத்தியடி பருத்தித்துறை
0779012475, 0776562674
Share This:

இடம்

மருதங்கேணி

வாழ்ந்த இடங்கள்

புலோலி மத்தி

You may have missed