Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

புலோலி கிழக்கு, கிராம கோட்டடியை பிறப்பிடமாகவும் தற்போது வீலர்ஸ் ஹில், விக்டோரியா, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா திருமாபத்தினி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  (06.10.2019)   அன்று ஆதிபராசக்தியின் அடியில் இறைபதம் அடைந்தார்.
 அன்னார் காலஞ்சென்றவரான வேற்பிள்ளை- சந்திரசேகரம் மற்றும் நித்தியலட்சுமி-சந்திரசேகரம்
அவர்களின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற செல்லையா தேவராசாவின் பாசமிகு மனைவியும் காங்கேயனின் (அவுஸ்திரேலியா) பாசமிகு தாயாரும் சஞ்சனாவின் (அவுஸ்திரேலியா) அன்பு மாமியாரும்  நக்கீரன் (லண்டன்) மங்கைசிவகாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கிருபாகரன், நகுலேஸ்வரன் (அவுஸ்திரேலியா) அருளானந்தம், நகுலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின்  அன்பு மைத்துனியும்  ஊர்மிளா, றோமி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  புதன்கிழமை (09 .10 .2019) முற்பகல் 10.30 மணியளவில் புலோலி கிழக்கு கிராமக்கோட்டடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“புலோலி வளவு”
 புலோலி கிழக்கு,
கிராமக்கோட்டடி,
 பருத்தித்துறை.
Share This:

இடம்

புலோலி கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

அவுஸ்திரேலியா

You may have missed