Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

வேலணை 1ம் வட்டாரத்தை சேர்ந்த கணபதி திருநாவுக்கரசு நேற்று முன்தினம் 04.10.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதி பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சபாபதி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,  நிமலன் (லண்டன்), கமலினி (யாழ் ப.நோ.கூ.சங்கம்), கேதீஸ்வரி (ஆசிரியை யா/சென்சாள்ஸ் மகா வித்தியாலயம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சியாமினி, சதா-   வேல்மாறன் (மிருதங்க வித்துவான்), ஸ்ரீகாந்தன் (சர்வோதயம்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  சாருமதி, சாரங்கி, சாம்பவி, சதுர்சன், தீபிகா, சங்கவி,  அமிர்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,  காலஞ்சென்ற நல்லையா மற்றும் நவரத்தினம் (ஓய்வு பெற்ற தபால் அதிபர்), ஆகியோரின் அருமைச் சகோதரனும்,  காலஞ்சென்ற அருளாம்பிகை மற்றும் கலாவதி ஆகியோரின் மைத்துனரும்,  இராஜஇராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,  அமரர் வசந்தன் மற்றும் ஜெயந்தன்,  முகுந்தன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 07.10.2019 திங்கட்கிழமை 82/4, கலட்டி அம்மன் வீதி,  யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0212217735
0115747793
0779173947
Share This:

இடம்

வேலணை

வாழ்ந்த இடங்கள்

வேலணை

You may have missed