Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

இமானுவேல் மங்களதாஸ்
(ஓய்வு பெற்ற யாழ் நகர சபை நீர்வேலைப் பகுதி ஊழியர்)
தோற்றம் 16.11.1952
மறைவு 01.10.2019
யாழ் குருசோ வீதியைப் பிறப்பிடமாகவும் மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இமானுவேல் மங்களதாஸ் நேற்று 01.10.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இமானுவேல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  சறோ (முன்னாள் ஆசிரியை கார்மேல் பாலர் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,  அன்ரிலின் றஜிதா (ஆசிரியை யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), அனற் நேருஷா (ஆசிரியை யா/ திருக்குடும்ப கன்னியர்மடம்), காலஞ்சென்ற அமலின் குயிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சர்வேஸ்வரன் (புடைவை வர்த்தகர்), லியோன் (வர்த்தகர்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  கொன்செப்ரா (முன்னாள் அலுவலகர் கத்தோலிக்க அச்சகம்), அன்ரனிதாஸ், காலஞ்சென்ற மேரி எட்மன்டா ஆகியோரின் அன்புச் சகோதரனும், குணேந்திரன் (யாழ் மாநகரசபை), விமலேந்திரன் (லண்டன்), பிறேமா, பாலேந்திரன் ((கத்தோலிக்க அச்சகம்), பிறேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும், டெஸ்மன் பபிதா (D.O. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை), அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,  கார்த்திகன் (மாணவன் யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), சுபேனா (மாணவி யா/சுண்டுக்குழி மகளிர் கல்லூரி), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி நாளை 03.10.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு றக்கா வீதியிலுள்ள புனித திரேசாள் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின் பூதவுடல் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776316193
0773237415
19/1, மருதடி வீதி
யாழ்ப்பாணம்
Share This:

இடம்

குருசோ வீதி, யாழ்ப்பாணம்

வாழ்ந்த இடங்கள்

மருதடி வீதி, யாழ்ப்பாணம்

You may have missed