மரண அறிவித்தல்
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருமைத்துரை நேற்று 27.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நீதிமலர் அவர்களின் அன்புக் கணவரும், காந்திமதி (நிறமதி சுவிஸ்), சுரேஸ்குமார் (ஆசிரியர் யா/உடுவில் புதுமடம் றோ.க.த.பாடசாலை), காலஞ்சென்ற ஹரிகரன் (நந்தன்), மற்றும் நளினி (வளர் – பிரான்ஸ்), கிரிஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஞானேஸ்வரன் (பிரான்ஸ்), ஞானேஸ்வரன் (சுவிஸ்), மதியுகன் (தாதி உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), ஆகியோரின் அன்பு மாமனாரும், தசானி, தசான், தர்மிஷன், டக்சிகா, டானுசா, ரிஷாந், யானுஷா, ஆஹீர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும், அன்னம்மா, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 30.09.2019 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
பா.மதியுகன் (மருமகன்)
0779353563
0214385807
இணுவில் தெற்கு
இணுவில்
இடம்
இணுவில் தெற்கு
வாழ்ந்த இடங்கள்
இணுவில் தெற்கு