Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரராஜசிங்கம் நேற்று முன்தினம் 23.09.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,  கலாபூஷண நாடகச்சக்கரவர்த்தி பரராஜசிங்கம் (பப்பா- முன்னாள் விற்பனைப் பிரதிநிதி ) அவர்களின் பாசமிகு மனைவியும்,  காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் தனலட்சுமி (பிரதி அதிபர் பெயார் லேன், தமிழ் மகா வித்தியாலயம் சாமிமலை), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  ரதீஸ் (ஆசிரியர் மெதடிஸ்த பெண்கள் உயர் தரப் பாடசாலை), றமேஸ் (முகாமைத்துவ உதவியாளர் காணிப்பதிவகம் மாவட்ட செயலகம்), றாதிகா (ஆசிரியர் புற்றளை மகா வித்தியாலயம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  மீரா (ஆசிரியை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை), நிரூஜா, கனிஸ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் இலங்கை வங்கி சுன்னாகம்), கிருபாகரன் (ஆசிரியர் மன்/பறப்பான் கண்டல் றோ.க.த.பாடசாலை), ஆகியோரின் அன்பு மாமியும்,  இலக்கியா, அட்ஷயா, அபிநயா,  அதிசயா, ஆகியோரின் பேரன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25.09.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கலைக்கோயில் சின்னத்தாய்
புலோலி தெற்கு புலோலி

0777448702

Share This:

இடம்

புலோலி தெற்கு புலோலி

வாழ்ந்த இடங்கள்

புலோலி தெற்கு புலோலி

You may have missed