மரண அறிவித்தல்
மாவிலங்கையடி அல்வாய் வட மத்தி, அல்வாயைப் பிறப்பிடமாகவும் அல்வாய் வட மேற்கு, திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கனகரத்தினம் இன்று (20.09.2019) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா வைராத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மற்றும் பாலேஸ்வரி (நாகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும், சிவகெங்கை, காலஞ்சென்ற தேவராஜா மற்றும் குணரத்தினம் (தெய்வம்), அவர்களின் அன்புச் சகோதரரும் சுதர்சன் (சுதன் லண்டன்), சயந்தன் (கர்ணன்), நிதர்சன் (சேந்தன்), நிரோசன், நிவேதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிருந்தா (லண்டன்), கஜாணனன் (ஆசிரியர் ஹாட்லிக் கல்லூரி), மைதிலி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிலாஸ் (லண்டன்), அஸ்மியா (லண்டன்), ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (22.09.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திக்கம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0212262915
அல்வாய் வடமேற்கு திக்கம்
இடம்
மாவிலங்கையடி, அல்வாய் வட மத்தி
வாழ்ந்த இடங்கள்
திக்கம்,,அல்வாய் வட மேற்கு