கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்இருபாலை, கோப்பாய் கானான் ஜெப ஆலய போதகர் ஹரி கந்தையா நேற்று முன்தினம்
இருபாலை, கோப்பாய் கானான் ஜெப ஆலய போதகர் ஹரி கந்தையா நேற்று முன்தினம்
05.08.2019 திங்கட்கிழமை இரவு 11.35 மணிக்கு கர்த்தருள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சகோதரி பிரியங்காவின் பாசமிகு கணவராவார். இவர் இங்கிலாந்து
பிரஜா உரிமை பெற்று அங்கு வசித்து வரும் போது ஆண்டவராகிய இயேசுவின் அழைப்பை
உணர்ந்து இலங்கை தேசத்திற்கு திரும்பி வந்து யாழ்ப்பாணம் கானான் ஐக்கிய
சபையிலே முழுநேர ஊழியனாக தனது மனைவியுடன் இணைந்து பணிபுந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக இரட்சகர் இயேசுவுக்காக அயராது உழைத்து நல்ல போராட்டம்
போராடி ஓட்டத்தை முடித்து விசுவாசத்தை காத்துக்கொண்ட அன்னாரின் அடக்க ஆராதனை
நாளை 08.08.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இருபாலை கானான் ஜெப
ஆலயத்தில் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் கோப்பாய்
ராஜவீதியில் உள்ள கானான் ஜெப ஆலய கல்லறைத் தோட்டத்திற்கு நல்லடக்கத்திற்காக
எடுத்துச் செல்லப்படும்.
தகவல்
தலைமை போதகர்
கானான் ஜெப ஆலயம் இருபாலை கோப்பாய்
0772208435
இடம்
யாழ்
வாழ்ந்த இடங்கள்
யாழ், லண்டன்