கராஜ் வைரமுத்து காலமானார்
தோற்றம்
30 July, 1936மறைவு
2 December, 2023முருகேசு சுப்பிரமணியம் (கராஜ் - வைரமுத்து) (வயது : 87)
நவிண்டில் சக்கலாவத்தை
வதிரி கோட்டைத் தெரு
நவிண்டில் சக்கலாவத்தை கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிரி கோட்டைத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பிரமணியம் அவர்கள் நேற்று (02.12.2023) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும், கதிர்காமு தெய்வானை தம்பதியரின் அன்பு மருமகனும், மற்றும் காலஞ்சென்றவரான பாக்கியலட்சுமியின் அன்புக் கணவரும், பாலாம்பிகை, யசோதாம்பிகை(ஜேர்மனி), சுபாம்பிகை, யோகாம்பிகை (டென்மார்க்), சிவராமன் (ஜேர்மனி), செந்தில்வேல் (அவுஸ்ரேலியா), ஜனாதனா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (கந்தவனம்), கந்தையா (சதாசிவம்), செல்லம்மா, திருநாவுக்கரசு (கதிரவேல்) ஆகியோரின் இளைய சகோதரரும், தங்கம்மா, வள்ளிப்பிள்ளை, பொன்னையா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயபாலு (உரிமையாளர், ஜெயா ரெக்ஸ் நெல்லியடி), கீர்த்தன் (ஜேர்மனி), சண்முகலிங்கம் (டென்மார்க்), மணிமேகலை (ஜேர்மனி), சசிந்தினி (அவுஸ்ரேலியா), தணிகைவேள் (ஆசிரியர் யா/நெல்லியடி மத்திய கல்லூரி), ஆகியோரின் அன்பு மாமனாரும், பாரத் அஞ்சனா, உமைசுதன் பர்ஷா, கிருஷாயினி (அமரர்), டல்ஷிகா, நிகாஷன், சாரங்கா, ஜோதிகா, தேனுகா, அருண்,லக்சனா, பிரவின் , டீபிகா, சமுத்திரா, துர்க்கா,பைரவி, தேஷ்னா ரோஹித் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.12.2023) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும், இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்