கண்ணீர் அஞ்சலி

தோற்றம்
1 February, 1945மறைவு
26 April, 2022கந்தையா நல்லையா (வயது : 77)
கொம்மாந்தறை
கொம்மாந்தறை
ஆயிரம் பிறை கண்ட ஆசான்
உப்பில்லா ஊற்று ( கொம்மந்தறை) மண் பெற்றெடுத்த
உயர்தரக் கணிதப்புலி
வடமராட்சி மண்ணின் மூத்த தலைமுறைக்
கணித விற்பன்னர்
ஆயிரம் பிறை கண்ட ஆசான்
நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை
கொத்துக் கொத்தாக மாணவர்கள்
போராட்ட களத்தை நோக்கிச் சென்ற எண்பதுகளில்
இன்னொரு தொகுதி வடமராட்சி மாணவர்களை
கட்டுக் கட்டாக பேராதனை , மொரட்டுவைப் பல்கலைக்கழகங்கள் நோக்கி
வடிகட்டி அனுப்பி வைத்த கணித யுத்த வீரன்
அட்சர கணிதம் விரல் நுனியில்
நாவில் நர்த்தனமாடும் நுண் கணிதம்
ஆள்கூற்றுக் கேத்திர கணிதத்தின் ஆணி வேர்
திரிகோண கணிதம் போல திரி மூர்த்திகளாய்
உம்மோடு வடமராட்சியில் கலக்கிய
மற்றிரு கணிதப் புலிகள் தில்லை, வெக்டர்
இவர்களையும் நினைவு கூருகின்றோம்
நெல்லியடி சந்தியில் அந்தக்காலத்து
கருங்குதிரை மோட்டார் சைக்கிளில்
நீர் கம்பீரமாய்
சயன்ஸ் சென்டர், பீக்கன் நோக்கி…
உம் நினைவுகளோடு என்றும்
வடமராட்சி கணித மாணவர்கள்