Mon. May 18th, 2026

Masters போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய ரமணனுக்கு பாராட்டு விழா

26வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணன் அவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
யா /நடேஸ்வராக்கல்லூரி சமூகமும் காங்கேசன்துறை சமூகமும் இணைந்து இந்தியாவில் நடைபெற்ற 26 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர்போட்டியில் 50வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களைக் கைப்பற்றி  நாட்டுக்கும் மாவட்டத்துக்கும் ஊருக்கும் பெருமை சோர்த்ததற்காக காங்கேசன்துறையைச் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவன் செலவராஜா ரமணன் அவர்களுக்கே இந்த பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
கே.மனோகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பி.முகுந்தன், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.செந்தில்குமரன், நடேஸ்வரா கல்லூரி அதிபர் பி.பாலகுமார், நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் வி.சுதர்சன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed