Sat. Apr 11th, 2026

JSAC நிறுவனம் knh/Bmz இன் நிதி அனுசரணையுடன் சிறுவர்களின் திறமைகளை வெளிகாட்டும் நிகழ்வு

JSAC நிறுவனம் knh/Bmz இன் நிதி அனுசரணையுடன் உட்படுத்தல் கல்வியை நடைமுறைப்படுத்தல் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மூன்று மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பங்குபற்றும் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொள்ள உள்ளார்.

பாடசாலை மட்டங்களிலும், சமூக மட்டங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு அவர்கள் கலை கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றுவதை ஊக்குவிப்பதோடு உட்படுத்தல் கல்விச் செயற்பாடுகளிலும் உள்வாங்கப்படுவதனை உறுதி செய்து அவர்கள் சேவைகளை பெறுவதில் முகம்கொடுக்கும் தடைகளையும் நிவர்த்தி செய்யும் முகமாக அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 2023 தொடக்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றி வருகின்றது. அந்த வகையில் இச் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக மும்மாவட்ட சிறார்கள் பங்குபற்றும்  நிகழ்வாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed