Fri. Apr 19th, 2024

Iphone 8 க்கு இணையான ஆப்பிளின் SE 2 பட்ஜெட் போன் மிக விரைவில்

Iphone என்றாலே நமக்கு தோன்றும் முதல் எண்ணம், இந்த போன்கள் மிகவும் விலை உயர்ந்த போன்கள் என்பதுதான். இந்த எண்ணத்தை மாற்றுவதற்காக Iphone நிறுவனம் தற்பொழுது புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

விலை உயர்ந்த Iphone மாடல்களை வாங்க சிலரால் மட்டுமே முடியும் என்ற நிலையில், மிகக் குறைந்த விலையில் Iphone மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் விலை போன்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனம் கால் பதிக்கத் தயாராகிவிட்டது.
இதன்படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் SE2 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. இந்த புதிய Iphone பற்றிய புதிய தகவல்களை ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வாளரான ‘மின் சி குவா’ தற்போது வெளியிட்டுள்ளார்.

 

இந்த புதிய Iphone SE2 மாடல் எப்போது வெளியாகும் என்றும், இதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்ற தகவல்களை தற்போது மின் சி குவா வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்த Iphone கம்மியான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆப்பிள் SE2 Iphone முந்தைய மாடலான Iphone 8 வடிவமைப்பை போன்று 4.7 இன்ச் அளவிலான எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதில் மிகவும் சக்தி வாய்ந்த மேம்பட்ட A13 சிப்செட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய Iphone மாடல் அடுத்த ஆண்டின், முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஆப்பிள் Iphone SE2 வெறும் US dollar 380 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்