Dr .ஷாபி சட்டத்துக்கு முரணாக சொத்து சேர்த்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை -சிஐடி
Dr .ஷாபி சட்டத்துக்கு முரணாக சொத்து சேர்த்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை -சிஐடி
9 கோடி ரூபா சொத்துக்களை எவ்வாறு Dr ஷாபி சேர்த்தார் என்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர் என்று அதன் இயக்குனர் SSP ஷானி அபேயசேகர நேற்றையதினம் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்ததாவது, Dr ஷாபி சொத்துக்களை சட்டதுக்கு முரணாக சேர்த்தமைக்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்றார்.
மேலும் தெரிவித்த அவர், வருமான வரி செலுத்திய விடயங்களையும் எவ்வாறு சொத்து சேர்த்து தொடர்பான தகவல்களையும் Dr ஷாபி எங்களுக்கு தெளிவாக வழங்கியுள்ளார். இந்த விசாரணைகள் மத்திய வங்கியின் உதவியுடன் இடம்பெற்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், சட்டத்துக்கு முரணாக கருத்தடை சிகிச்சை செய்த குற்றசாட்டு தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இருநுத போதிலும் இந்த விசாரணைக்காக குற்றம் சுமத்திய பெண்களிடம் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டிஇருக்கிறது என்று கூறினார்