Fri. Apr 19th, 2024

B.Ed கற்கைநெறியில் பாதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் – ப.தர்மகுமாரன் வேண்டுகோள்

B.Ed கற்கைநெறியில் பாதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு துறைசார்ந்த பட்டப்படிப்பு  தேவை என சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய உடற்கல்வித்துறையில் B.Ed கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. இக் கற்கை நெறி ஆரம்பிக்க முன்னரும் ஆரம்பித்த பின்னரும் எமது சங்கம் இரண்டு வள நிலையங்களை அமைக்குமாறு வற்புறுத்தி தேசிய கல்வி நிறுவனம் ஒப்புக்கொண்ட போதும் ஒரு சிலரின் சிந்தனையற்ற தான்தோன்றித்தனத்தால் வவுனியாவில் மட்டும் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 70 வீதமானோர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆர்வத்துடன் கற்கைநெறிக்கு சென்ற போதும் 40 வீதமானவர்கள் இக்கற்கைநெறியில் இருந்து விடுபட்டுள்ளனர். இவர்கள் முழுமையான பணத்தை கட்டியும் தமது நேரகாலத்தை செலவு செய்தும் பரீட்சை எழுதமுடியாது வெளியேற்றப்பட்டுள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் என்பதனால் மாணவர்களை போட்டிக்கு கொண்டு செல்லுதல், பயிற்சி வழங்கல், நடுவராக கடமையாற்றுதல் போன்ற கடமைகள் கருத்தில் கொள்வோம் என ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட நிர்வாகம் இன்று ஆசிரியர்களை நிர்கதியில் விட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் தமது தகமையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல இலட்சம் ரூபாயை செலவு செய்தும் காலங்களை வீணாக இழந்தும்  தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய காலத்தில் பூர்த்தி  செய்யாமலும் பாதிக்கப்பட்டு உளநெருக்கீட்டுக்கு

உள்ளாகியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  முதலாம் வருட பரீட்சை எழுதுவதற்கும் கற்கையை தொடர்வதற்கும்  நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்  கேட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்