9 வேடத்தில் அசத்தப்போகும் ஜெயம் ரவியின் கோமாளி
ஜெயம் ரவி , காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் படம் கோமாளி.
இயற்கையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் கதையை நகைச்சுவை கலந்த சிந்திக்க வைக்கும் படமாக உருவாகிறது கோமாளி.
இதில் ரஜனியின் அரசியல் சீண்டும் வசனங்கள் உள்ளதாக ரஜனி ரசிகர்கள் விசனத்தை வெளியிட்டதையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் ஆதிவாசி தொடக்கம் நவீன காலம் வரையிலான காலகட்டத்தில் பள்ளி மாணவன், இளைஞன் அரசியல்வாதி என ஒன்பது வேடங்களில் நடிக்கின்றார் ஜெயம் ரவி.
பள்ளி பருவத்தில் ஏற்படும் விபத்தால் கோமா நிலைக்கு சென்ற ஜெயம் ரவி 16 வருடங்கள் கழித்து கண்வழிக்கின்றார். முன்னைய வாழ்க்கைக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பில் இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்கிறான என்பதையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பை தத்துருவமாக நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் காஜல் அகர்வால் தாரளமாக கவர்ச்சிக்கு குறைவின்றி வழங்குகிறார். இவர்களுடன் யோகிபாபு, ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.