9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
கஞ்சா வைத்திருந்தமைக்காக தலவத்துகொட தலங்கம பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 45 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் தலவத்துகொட பகுதியில் வசிக்கும் 40 வயது நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அவர் கடுவேல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.