Sun. Sep 8th, 2024

8 விக்கெட்டுக்களால் வெற்றி யாழ் பல்கலைக்கழக அணி இறுதியாட்டத்தில் 

இலங்கை பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் இன்று  சனிக்கிழமை ராஜரட்ட பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து தென்கிழக்கு பல்கலைக்கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்கிழக்கு பல்கலைக்கழக அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றனர்.
அவ்வணி சார்பில் சந்திரஸ்ரீ ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும்,  பாலசூரிய 28, ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் யாழ் பல்கலைக்கழக அணி சார்பில் டனுஸ்கா 3, லோகேஸ்வர் 3, சுபேந்திரன் 2 , விக்கெட்டுகளையும் சின்டு, நிதர்சன் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
126 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் பல்கலைக்கழக அணி 18.2 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அவ்வணி சார்பில் கல்கோகன் 54, டனுசன் 27, துவாரகசீலன் ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்