Sun. Sep 15th, 2024

8 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரின் கணவர்!!

கல்முனை பகுதியில் வீதியால் சென்ற 8 வயது பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டார்.

கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த பாத்திமா இன்சாத் (வயது 8) என்ற மாணவி வீடு திரும்பிய வேளை கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த ஏ.கரீம் (வயது 55) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியுள்ளார்.

குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார். வீட்டிற்குள் வந்த மாணவினை அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மாணவி எழுப்பிய கதறல் சத்தத்தை அடுத்து அயலவர்கள் அங்கு வந்துள்ளனர். அலயவர்களை கண்டு சுதாகரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்தனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியைய பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்