Thu. Mar 20th, 2025

8 வயது சிறுமி மற்றும் தாயார் கடத்தல், சந்தேக நபர்கள் கைது

ஒரு சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி மற்றும் அவரது தாயார் பணத்துக்காக கடத்தப்பட்ட சம்பவம் து தொடர்பாக தொடங்கொட போலீசார் விசாரணையைத் நடத்திவருகிறார்கள்
அதன்படி, 40 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடங்கோடா மற்றும் களுத்துறை தெற்கில் வசிப்பவர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஒரு காற்று துப்பாக்கி ( ஏர் கண் , air gun ), போலீஸ் சீருடை மற்றும் ஒரு வாள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுமி, நாகோடா-கலுதாரவில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவருகிறார் . குழந்தையின் தந்தை களுத்துறை நாகொடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வருடாந்திர பரிசளிப்பு விழாவில் ஏராளமான பரிசுகளையும் சான்றிதழ்கள் வென்றிருப்பதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கினறனர் .
நீதிமன்ற உத்தரவின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்