8 மணி நேர அதிரடி சுற்றிவளைப்பு!! -136 வெளிநாட்டவர்கள் கைது-
நாட்டில் கடந்த 8 மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 136 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா இல்லாமல் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்திய பிரஜைகள் (82) என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான் (12), மாலத்தீவு (10), நைஜீரியா (08), பங்களாதேஷ் (06), சீனா (04), கனடா (04), தாய்லாந்து (02), சுவிட்சர்லாந்து (02), அமெரிக்கா ( 01), கத்தார் (01), சுவீடன் (01), ஆப்கானிஸ்தான் (01), இஸ்ரேல் (01), கொரியா (01) ஆகியோரும் அடங்குவர் என்று அறிவிக்கப்படுள்ளது
கைது செய்யப்பட்ட 4 கனடா நாட்டவர்களும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமிழர்களா என்பது தெரியவரவில்லை