Mon. May 18th, 2026

75,000 ரூபா பெறுமதியான பசுவை திருடி வர்ணம் பூசி விற்ற திருடன் .

மொனராகலைப் பகுதியில் பசு மாட்டை களவெடுத்து அதற்க்கு வர்ணம் பூசி இறைச்சி கடைக்கு விற்பனை செய்த திருடனை பொலிஸார் கைதுசெய்ததோடு மாட்டையும் உயிருடன் மீட்டுள்ளார்கள். பொலிசாருக்கு பசுவின் உரிமையாளர் வழங்கிய தகவலொன்றையடுத்து பக்கினிகாவெலை என்ற இடத்தில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடையொன்றிலிருந்து வர்ணம் தீட்டப்பட்ட பசுவை மீட்டனர்.

குறித்த பசுவின் உடலில் இடைக்கிடையே வெள்ளை மற்றும் கறுப்பு வர்ணங்களால் நிறம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பசு காணாமல் போனநிலையில் பசுவின் உரிமையாளர் மொனராகலைப் பொலிசாருக்கு புகார் ஒன்றை வழங்கி இருந்தார். இதில் தமது பசுவின் பெறுமதி எழுபத்தையாயிரம் ரூபாவென்றும் அதன் அடையாளங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுவின் உரிமையாளருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து இறைச்சிக்கடைக்கு சென்ற பசு உரிமையாளர் தமது பசுவைப் பசுவின் நெற்றியிலுள்ள அடையாளத்தை வைத்து தமது பசுவென்பதையும் பசுவின் உடம்பெங்கும் வர்ணம் தீட்டப்பட்டிருப்பதையும் கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்

இதையடுத்து பொலிசார் குறித்த பசுவை மீட்டதுடன் பசுவைத் திருடிய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed