70 – 80 கிலோ மீற்ரர் வேகத்தில் காற்று சிவப்பு எச்சரிக்கை
அதிவேகமாக வீசப்படும் காற்றினால் இலங்கையில் பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மேலும் பல பகுதிகளில் காலநிலை பாதிப்பு ஏற்படும் என அஞ்ழசி அரசாங்கத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்தி, வடமேல் மகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளைப் பகுதியில் மணிக்கு 70 – 80 கிலோ மீற்ரர் வேகத்தில் காற்று வீசும் எனவும் ஏனைய மாவட்டத்திலும் மணிக்கு 50 – 60 கிலோ மீற்ரர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.