60 கிலோ கஞ்சா நெல்லியடி பொலிஸாரால் மீட்பு
தேசிய புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 59.600 கிலோ கிராம் நிறையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கரவெட்டி மண்டான் கிராய் இந்து மயானத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட போதும் வைத்திருந்தவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டையில் 59.600 கிலோ கிராம் நிறையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 48 லட்சம் ரூபா இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த நபர்களை நெல்லியடி பொலீஸார் தேடி வருகின்றனர்