Thu. Sep 21st, 2023

60 எம்.பிக்களுடன் தனித்து களமிறங்க தயாராகும் சஜித்!! -கசியும் இரகசிய தகவல்கள்-

நாடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக இரகசிய தகவல் வெளியாகி உள்ளது.

சஜித்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடத்திய கூட்டம் ஒன்றில் இது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று குறித்த கூட்டம் இடம்பெற்றது.

கட்சியின் தலைமைப்பீடம், சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கா விட்டால், மாற்றுத்தீர்மானம் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்