Sun. Apr 12th, 2026

6 மாதங்களின் பின்னர் உடுப்பிட்டிக்கு அதிபர் நியமனம்

6 மாத காலத்திற்குப் பின்னர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்குப் புதிய அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்கு புதிய அதிபராக வேலுப்பிள்ளை  புவனேந்திரராசா இன்று (4) பதவியேற்றுள்ளார். உடுத்துறை மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இவர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அதிபராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.  முன்னைநாள் அதிபர் சு.கிருஷ்ணகுமார் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து சுமார் 6 மாதங்களின் பின்னர் இந்நியமனம் வடமாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கப்பட்டு இன்று பதவியேற்றுள்ளார். இன்று அவரை சம்பிரதாய பூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் பிரதி அதிபர்களான திரு.த.விஜயகுமார்,  திருமதி கீ.கிரிதரன்,  பழைய மாணவர் சங்கச் செயலாளர் கு.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed