Fri. Mar 29th, 2024

5000 மீற்றர் ஓட்டத்தில் எஸ்.செவ்வானம் தங்கம்

பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களிற்கான 5000 மீற்ரர் ஓட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.செவ்வானம் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள் பெண்களிற்கான தடகளத் தொடர் இன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களிற்கான 5000 மீற்ரர் ஓட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். செவ்வானம் தங்கப் பதக்கத்தையும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த

பா.றெக்சனா வெள்ளிப் பதக்கத்தையும்,  பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த

ஜெ.சிந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்