Fri. Mar 21st, 2025

500 மில்லியன் ரூபாயில் புது பொலிவுபெற இருக்கும் பூநகரி-ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெள்ளிக்கிழமை (ஜன.05) பூநகரி பிரதேசத்திற்கும் விஜயம் செய்திருந்தார்

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மதிப்பீடு செய்யும் கலந்துரையாடலில் அவர் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துகொண்டார்.

நகர அபிவிருத்தி அமைச்சின் . 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை பூநகரி நகர அபிவிருத்திக்காக ஒதுக்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

கூடுதலாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்