50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினாா் யாழ்.இந்துக்கல்லுாாி அதிபா்.
பாடசாலையில் மாணவனை சோ்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது யாழ்.இந்து கல்லுாாியி ன் அதிபா் சதா நிமலன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்ய முயற்சிக்கப்பட்டபோது தப்பித்துக் கொண்ட குறித் த அதிபா் சற்று முன்னா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவாிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளாா்.
குறித்த அதிபா் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.